ஜோர்ஜ் டவுன், பிப் 9 – பினாங்கு தீவில் நேற்று மாலை மணி 5-வாக்கில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடுமையான காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததோடு வீடுகளில் கூரைகளும் பறந்தன. எனினும் இந்த சம்பவத்தினால் எவரும் காயம் அடையவில்லை என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Phee Boon Poh தெரிவித்தார்.
Jalan Zainal Abidin, Bukit Bendera, Jalan Tengku போன்ற பகுதிகள் உட்பட 16 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. Sungai Ara அரங்கிற்கு அருகில் உள்ள medan Selera கட்டடத்தின் கூரை பற ந்து, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்ததாகவும் தகவல் கிடைத்ததாக Phee Boon Poh குறிப்பிட்டார்.