நிபோங் திபால், அகஸ்ட் 23 – பினாங்கு, சுங்கை பாக்கப்பில் உள்ள உணவகம் மற்றும் பழைய பொருட்கள் விற்கும் கடைகளில் பணிபுரிந்து வந்த 9 வெளிநாட்டினர் நேற்று, கைதாகினர்.
ஏற்கனவே, அவ்வளாகங்களைச் சுற்றி வளைத்த குடிநுழைவுத் துறையிடம், சோதனையின் போது தப்பி ஓட முயற்சித்த அவர்கள் கையும் களவுமாகப் பிடிப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட இரண்டு கடைகளில் பணிபுரிந்து வருகின்ற 17 வெளிநாட்டினரும் இச்சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதில், முறையாக ஆவணமில்லாத 25 வயது முதல் 38 வயதுடைய ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு மியான்மர் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்திய அந்த வணிக கடை உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.