ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர் -4, பினாங்கு, ஜியோர்ஜ்டவுனில் கேளிக்கை மையத்தில் வைத்து வெளிநாட்டு ஆடவரைத் தாக்கியதன் பேரில், 3 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
Bay Avenue-வில் உள்ள கேளிக்கை மையத்திற்குள் நுழைந்த அக்கும்பல் கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு அந்த வெளிநாட்டவரைத் தாக்கியது.
அதில் அவ்வாடவருக்கு தலை, கை, கால்களிலும் காயம் ஏற்பட்டது.
அதோடு, அக்கும்பலோடு போராடும் போது, தன்னிடமிருந்த 2,000 ரிங்கிட் ரொக்கமும் காணாமல் போனதாக அவர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, 29-30 வயதிலான 3 சந்தேக நபர்களை IPD Barat Daya குற்றப்புலனாய்வுத் துறை கைதுச் செய்தது.
விசாரணைக்காக மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.