புக்கிட் மெர்தாஜம், நவ 18 – ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி அதன் கொள்கலன் கார் மேல் விழுந்து 21 வயது இளம் பெண்ணுக்கு மரணம் விளைவித்த குற்றத்தை லோரி ஓட்டுனர் ஒருவர் மறுத்தார்.
நவம்பர் 13ஆம் தேதி காலை மணி 9.16 அளவில் அபாயகரமாக ஓட்டிச் சென்ற லோரியினால் ஜாலான் கெபுன் சீரேவில் Lee Zi Rouக்கு மரணம் விளைவித்ததாக பெர்லீஸ் கங்காரைச் சேர்ந்த 51 வயது Marhizan மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 ரிங்கிட் அபரதம் , 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ஓட்டுனர் உரிமம் 5 ஆண்டு காலத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் வகையில் 1987 ஆம் ஆண்டின் போக்குவரத்து சட்டத்தின் 41 ஆவது பிரிவு உட்பிரிவு (1) இன் கீழ் மர்ஹிசான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது .
அவருக்கு ஜாமின் வழங்க மாஜிஸ்திரேட் Harith Mazlan மறுத்ததோடு , Puspakom இந்த விபத்து குறித்த அறிக்கை , மருத்துவ மற்றும் சவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கும்பொருட்டு ஜனவரி 24ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.