
செபராங் பெராய், செப்டம்பர் 4 – பொது இடத்தில் தனது பிறப்புறுப்பைக் காட்டி அநாகரீகமாக நடந்து மோட்டார் சைக்கிளோட்டியை போலிசார் கைது செய்துள்ளனர்.
செபராங் பெராய் தெங்கா போலிஸ் தலைவர் Tan Cheng San இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
அந்த ஆடவன் இன்று காலை புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்திற்கு தடுப்புக் காவல் அனுமதிக்காக கொண்டு வரப்பட்டிருந்தான்.
பொது இடத்தில் ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டதற்காக அவன் மீது குற்றவியல் சட்டம் பிரிவூ 509ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யமஹா LC135 ரக மோட்டாள் சைக்கிளில் வந்த அந்த ஆடவன் துரித உணவகத்தின் கார் நிறுத்துமிடத்தில் ஒரு பெண் இருந்த காரை நோக்கிச் சென்று தன்னுடைய கால்சட்டையை கலற்றி தனது மர்ம உறுப்பை காட்டிவிட்டு சென்றிருக்கின்றான்.
பின்னர் அப்பெண் புக்கிட் மெர்தாஜாம் போலிஸ் நிலையத்தில் புகார் செய்ததன் தொடர்பில் தற்போது அந்த ஆடவன கைது செய்யப்பட்டுள்ளான்.