
பினாங்கிலுள்ள, மேலும் மூன்று பன்றிப் பண்ணைகளில், பன்றி காய்ச்சல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பன்றி காய்ச்சல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பன்றி பண்ணைகளின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, செபராங் பெராய் உத்தாரா, செபராங் பெராய் செலாத்தான், செபராங் பெராய் தெங்ஙா ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள பன்றிப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பன்றி காய்ச்சல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டால், அது குறித்து பண்ணை உரிமையாளர்கள் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் தொடர்ந்து பரவாமல் இருப்பதை உறுதிச் செய்ய அது உதவுமென மாநில முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்துள்ளார்.