நிபோங் திபால், அக்டோபர்-2 – போலி ‘arai’ முத்திரையைப் பயன்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்ட 216 தலைக்கவசங்களை (helmet) உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) பினாங்கு கிளை பறிமுதல் செய்துள்ளது.
அவற்றின் மொத்த மதிப்பு 54,000 ரிங்கிட் ஆகுமென, பினாங்கு KPDN இயக்குநர் ஜெகன் சுப்ரமணியம் தெரிவித்தார்.
நிபோங் தெபால் , சுங்கை பாக்காப்பில் உள்ள வணிகத் தளமொன்றில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் அவைக் கைப்பற்றப்பட்டன.
அசல் arai முத்திரைக்கான காப்புரிமையை வைத்திருக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அசல் முத்திரையின் உரிமையாளர் தயாரிக்காத ஹெல்மட்டுகளை, போலி முத்திரையுடன் விற்றதாக புகார்கள் எழுந்ததால், மோட்டார் சைக்கிள் உபரிப் பாகங்கள் மற்றும் தலைக்கவசங்களை விற்கும் அக்கடையில் அச்சோதனை நடத்தப்பட்டது.
மேல் விசாரணைக்காக கடை உரிமையாளரின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், 1987-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.