Latestமலேசியா

பினாங்கு சட்டமன்றம் – சபாநாயகருக்கு எதிராக நால்வர் தொடுத்த வழக்கு தள்ளுபடி

George Town , Jan 20 — சட்டமன்றத்தை காலி செய்யும்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பினாங்கு சட்டமன்றம் மற்றும் அதன் சபாநாயகருக்கு எதிராக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடுத்திருந்த வழக்கை செலவுத் தொகை எதுவும்மின்றி இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பி.கே.ஆர் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சி தாவியதற்காக நீக்கப்பட்ட Zulkifli Dr Afif மற்றும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த Khaliq Mehtab, Zolkifly ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதித்துறை ஆணையர் Azizan Md Arshad தீர்ப்பளித்தார். மாநில அரசியலமைப்பு சட்டத்தின் 14 A விதிமுறை செல்லுபடியாகும் என ஏற்கனவே கூட்டரசு நீதிமன்றம் முடிவு செய்திருப்பதால் அந்த முடிவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக Azizan Md Arshad  தெரிவித்தார்.

தங்களுக்கு எதிரான தீர்மானம் தவறானது என வாதிகள் தொடுத்திருந்த வழக்கு மனுவில் நீதிமன்றம் முடிவை எடுக்க முடியாது. இந்த விவகாரம் மாநில சட்டமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டதாக உள்ளது. அதோடு சட்டமன்ற கூட்டத்தின்போது தொகுதிகளை காலி செய்யும்படி வாதிகளை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் குறித்து பிரதிவாதிகளை தடுப்பதற்கு எதிராக தடையுத்தரவு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும் Azizan Md Arshad தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!