Latestஇந்தியா

பஞ்சாபில், சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர், திருமண நிகழ்ச்சியில் ‘குத்தாட்டம்’; விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

பஞ்சாப், டிசம்பர் 14 – இந்தியா, பஞ்சாப் மாநிலத்தில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர், திருமண விருந்து நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பவத்தின் காணொளி ஒன்று, நேற்று தொடங்கி வைரலாகியுள்ளதை அடுத்து, இரு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சர்வோதம் சிங் எனும் அந்த இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக, கலவரத்தில் ஈடுபட்டது, கடத்தல், தாக்குதல், துப்பாக்கிச் சூடு, மிரட்டி பணம் பறிப்பது என பல குற்றச்சாட்டுகளுக்காக குறைந்தது ஒன்பது வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பரில், கடத்தல் மற்றும் கலவர வழக்கில் கைதாகி, லூதியானா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சர்வோதம் சிங், ராய்கோட்டில் நடைபெற்ற திருமண விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதர விருந்தினர்களிடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டது பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளது.

அந்த திருமண விருது நிகழ்ச்சி, இம்மாதம் எட்டாம் தேதி நடைப்பெற்றதாக, கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்மாதம் எட்டாம் தேதி, உடல்நலக் குறைவால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சர்வோதம் சிங், சிறைச்சாலைக்கு திரும்பும் வழியில் அந்த திருமண விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கலாம் என நம்பப்படுவதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் சிவராஜ் சிங் கூறியுள்ளார்.

அதனால், சம்பவத்தின் போது சர்வோதம் சிங்குடன் இருந்த இரு போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அவ்விவகாரம் தொடர்பில் முழு விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!