பினாங்கு சட்டமன்ற தேர்தலில் தே.மு.வுடன் பக்காத்தான் இணைந்து பணியாற்றும் – லிம் குவான் எங்

ஜோர்ஜ் டவுன், ஜன 2 – எதிர்வரும் பினாங்கு மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றுவது குறத்து DAP ஆராயும். தற்போது கூட்டரசு நிலையில் ஒற்றுமை அரசாங்கம் இருப்பதால் மாநிலங்களும் அதற்கு ஏற்ப செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டிப்பதாக DAP யின் தலைவர் லிம் குவான் எங் தெரிவித்திருக்கிறார். பினாங்கு மாநில தேர்தலில் நாங்கள் ஒரு குழுவாக செயல்படுவோம். பேரா மற்றும் பகாங் மாநிலங்களிலும் தற்போது ஒற்றுமை அரசாங்கம் இருந்துவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகள் தேசிய முன்னணியுடன் விவாதிக்கப் போவதாக இன்று ஜாலான் ரங்கூனில் நடைபெற்ற DAP தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் லிம் குவான் எங் தெரிவித்தார். தொகுதி பங்கீடுக்கான நடைமுறை எப்படியிருக்கும் என வினவப்பட்டபோது பிரதமரும் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இது குறித்து விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.