
பினாங்கு, ஆக 21 – பினாங்கில் சட்டவிரோத மோட்டார் ஓட்டப்பந்தயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 50 மோட்டார் சைக்கிள்களைப் போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதிகமாக இந்த பந்தயங்கள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் செய்யப்பட்ட சோதனையில் இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலிஸ் தரப்பு கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல், அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டதோடு, 230 சம்மன்களும் வெளியிடப்பட்டன.