Latestமலேசியா

பினாங்கு – சிங்கப்பூர் வான் வழிப் பயணம் மார்ச் 16-இல் தொடங்குகிறது

கோலாலம்பூர், மார்ச் 4 – சிங்கப்பூர் – பினாங்கு இடையிலான VTL வான் வழிப் பயணம், மார்ச் 16- ஆம் தேதி தொடங்கவுள்ளது.

முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் அத்திட்டத்தின் கீழ், பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என போக்குவரத்து அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் ( Dr. Wee Ka Siong ) தெரிவித்தார்.

அந்த புதிய பயணத் திட்டத்தின் கீழ், பினாங்கு – சிங்கப்பூர் இடையில் நாள்தோறும் நான்கு விமான பயணங்கள் மேற்கொள்ளப்படும். அதற்கான பயண டிக்கெட்டுகள் விரைவில் விற்கப்படுமென போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!