Latest

பினாங்கு தீவில் கனமழை & புயல் காற்றில் 20 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன ; எவருக்கும் காயமில்லை

ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர் -15 -பினாங்கு தீவில் நேற்று நள்ளிரவு தொடங்கி பெய்த கனமழை மற்றும் புயல் காற்றில் 20 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இன்று அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரையில் அவசரப் புகார் பிரிவுக்கு அது குறித்து புகார்கள் கிடைக்கப் பெற்றதாக பினாங்கு மாநகர மன்றம் MBPP கூறியது.

Tun Dr Lim Chong Eu நெடுஞ்சாலையின் N-Park அடுக்குமாடி சாலைச் சந்திப்பு, Jalan Sultan Azlan Shah-வில் உள்ள Petron எண்ணெய் நிலையம் முன்புறம், Relau, Batu Maung, Persiaran Bukit Jambul, Solok Bukit Jambul, Jalan Sungai Dua உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட இடங்களாகும்.

Jalan Tun Dr Awang Bayan Lepas, Bayan Baru, Cangkat Minden, Kolej Vokasional Batu Lanchang, Jalan Bukit Balik Pulau, Jalan Bukit Gambir ஆகியவை மரம் விழுந்த ஏனையப் பகுதிகளாகும்.

MBPP பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு, விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தைச் சீராக்கினர்.

பாயான் லெப்பாசிலும் ஆங்காங்கே மரங்களும் மரக்கிளைகளும் வாகனங்கள் மேல் விழுந்து சிறு சிறு சேதாரங்கள் ஏற்பட்டன.

ஆனால் எவரும் காயமடையவில்லை என பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் Datuk Azrul Hahathir Aziz தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!