
கோலாலம்பூர், செப் 18 – அடுத்த ஆண்டு நடைபெறும் பினாங்கு தைப்பூசத்தின்போது தங்க ரதம் மற்றும் வெள்ளி ரத ஊர்வலம் சுமுகமாக நடைபெறுவதற்கான ஒத்துழைப்பு அனைத்து தரப்பினரிடமும் நாடப்படும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் புதிய தலைவரான ஆர்.எஸ் .என் ராயர் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே பினாங்கு ஆலயத்தில் தைப்பூசத்திற்கான இரத ஊர்வலங்கள் விவகாரத்தில் எந்தவொரு சர்சையும் இருக்கக்கூடாது என்பது தமது நோக்கமாக இருப்பதால் இந்த அடிப்படையிலேயே தமது தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் செயல்பாடு இருக்கும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ராயர் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
கடந்த காலங்களில் பினாங்கு தைப்பூசத்தின்போது தங்க ரதம் மற்றும் வெள்ளி ப்ரதம் ஊர்வலங்கள் குறித்து கருத்து வேறுபாடு அதிகமாக இருந்தது. பினாங்கு தண்ணீர்மலை நகரத்தார் ஆலயதுடன் இந்த விவகாரத்தில் இணைந்து செயல்படுவதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வியும் ராயரிடம் எழுப்பட்டது. ரதம் ஊர்வலம் தொர்பாக பினாங்கு நகரத்தார் சமூகத்துடன் ஒத்துழைப்பை பெறுவதற்கான நடவடிக்கை குறித்து பினாங்கு இந்து அறப்பணி வாரியம் எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்தும் ராயர் விவரித்தார்.
ஆலயங்களை பராமரிப்பதோடு மட்டுமின்றி கல்வி மற்றும் சமூக பிரச்சனைகளிலும் இந்து அறப்பணி வாரியம் கடந்த காலங்களில் கவனம் செலுத்தி வந்தது. இந்த பணிகள் தொடர்வதற்கான நடவடிக்கைகளிலும் இந்து அறப்பணி வாரியம் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தும் என ராயர் கூறினார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தன் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள தாம் அணைத்து தரப்பினரிடமும் இணைந்து பணியாற்றுவதற்கு தயராய் இருப்பதாகவும் தம்முடன் இணைந்து பணியாற்றுவதற்கு அனைத்து அறப்பணி வாரிய உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியிருப்பது குறித்தும் ராயர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
பினாங்கில் இந்து சமயத்தின் மேம்பாட்டிற்கு தொடர்ந்து பல்வேறு செயல் திட்டங்களில் தாம் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.