Latestமலேசியா

பினாங்கு தைப்பூசம்; ஆலய நிர்வாகத்துடன் போலீஸ் ஒத்துழைக்கும்

ஜோர்ஜ் டவுன், ஜன 11 – தைப்பூசத்தின்போது அனைத்து தரப்பினரும் SOP யை பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு பினாங்கிலுள்ள ஆலய நிர்வாகத்துடன் போலீஸ் ஒத்துழைக்கும் என அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ Mohd Shuhaily Mohd Zain கூறினார். கோவிட் தொற்று இன்னமும் வேகமாக பரவி வருவதால் தைப்பூசத்தில் கூடுவோர் SOP யை பின்பற்றுவதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தைப்பூசத்திற்கான SOP குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவிப்பார்கள். தைப்பூசத்திற்கான SOP யை பக்தர்கள் பின்பற்றுவதை ஆலய நிர்வாகத்தினரும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத்தில் இரண்டு இரத ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
Mohd Shuhaily தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!