ஜோர்ஜ் டவுன், நவ 7 – இன்று காலையில் பினாங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் சுமார் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலினால் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை விபத்து மிகவும் மோசமாக்கியிருப்பதாக பல வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதனால் பினாங்கு பாலத்தை சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மிக மோசமாகியது.
பினாங்கு தீவுக்கு செல்லும் பாலத்தின் 7. 7 ஆவது கிலோமீட்டரில் விபத்து ஏற்பட்டதை இன்று விடியற்காலை மணி 5.58 அளவில் வாகனமோட்டிகளுக்கு பிளஸ் மலேசிய பெர்ஹாட் @plustrafik X மூலம் நினைவுபடுத்தியிருந்தது.
இதன் விளைவாக இடது மற்றும் வலது பாதைகள் அடைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட மற்றொரு தகவலில் இடது பாதையின் ஒரு பகுதி மட்டுமே இன்னும் மூடப்பட்டிருப்பதாக பிளஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது.