
கோலாலம்பூர் , ஜூன் 6 – ஜூன் 1-ஆம் தேதி பினாங்கு போலீசுக்கு அஞ்சல் வழி அனுப்பிய மிரட்டல் கடிதத்தை முன்னிட்டு நாட்டில் வட்டி தொழிலில் ஈடுபட்ட 13 சந்தேக பேர்வழிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த 13 பேரும் பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்களில் கைது செய்யப்பட்டதாக , பினாங்கு மாநில போலீஸ் தலைவர் Datuk Khaw Kok Chin தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்த 13 நபர்களின் மீது பணம் கடன் வழங்குபவர்கள் 1951-ஆண்டு , சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.
இதனிடையே, இத்தகைய ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட வட்டி முதலைகளின் மீது கடுமையான தண்டனை எடுக்கப்படும் என, போலீஸ் படை தலைவர், Tan Sri Acryl Sani Abdullah Sani எச்சரித்துள்ளார்.