கோலாலம்பூர், மே 11 – பினாங்கு மருத்துவமனையில் பகடி வதையில் சம்பந்தப்பட்ட 5 மருத்துவர்களின் பெயர்களை மேல் நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் Norlela Ariffin தெரிவித்தார். எனினும் கடந்த மாதம் Jalan Datuk Keramat ட்டில் உள்ள தமது அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலிருந்து கீழே விழுந்த பயிற்சி மருத்துவருக்கும் அந்த ஐந்து மருத்துவர்களுக்கும் தொடர்பு இல்லையென அவர் கூறினார். பினாங்கு மருத்துவமனையில் பகவடி வதையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஐந்து மருத்துவர்களின் பெயர்களை நான் சமர்ப்பித்துவிட்டேன். சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin னிடமிருந்து இதற்கு பதில் கிடைத்துள்ளது. .அந்த பயிற்சி மருத்துவரின் மரணம் தொடர்பாக போலீஸ இன்னமும் விசாரணை நடத்திவருவதாக Norlela Ariffin கூறினார்.
Related Articles
Check Also
Close