
பினாங்கு, ஆக 23 – பினாங்கு முதலமைச்சர் பதவியை தமிழர்கள்தான் வகிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இந்த பதவிச்தோற்றுவிக்கப்படுவதற்கு தம்முடைய தந்தை கர்ப்பால் சிங் முக்கிய பங்கு வகித்திருந்தாலும் அது ஒட்டுமொத்த இந்தியர்களின் மேம்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்டதே தவிர தமிழர்கள்தான் வகிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல என கூறியிருக்கின்றார் பினாங்கு துணை முதல்வர் ஜக்டிப் சிங் டியோ.
ஒரு சிலர் தமிழர்தான் அப்பதவியை வகிக்க வேண்டும் என்று சொல்வது, தேவையற்ற மற்றும் இனவாத அடிப்படையிலான கோரிக்கையாக இருக்கிறது. 1906 இந்து அறப்பணி வாரியத்தின் சட்டபடி, இந்து என்றால் சீக்கியர்களையும் உள்ளடக்கியதுதான்.
பழைய துணை முதல்வர் ஏற்படுத்தியிருக்கின்ற தோற்றத்தை தகர்த்து, நான் அனைவருக்கும் சேவையாற்றுவேன். அதில் இந்தியர்கள் மட்டுமின்றி சிறுபான்மையினரும் அடங்கியிருப்பர் என இணையத்தள ஆங்கில செய்திக்கு வழங்க்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.