ஜோர்ஜ் டவுன், பிப் 4 – பினாங்கு,ஜோர்ஜ்டவுன் , Air Itam-மிலுள்ள 131 ஆண்டுகள் பழைமையான Kek Lok Si ஆலயத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயில், அவ்வாலய வழிபாட்டு பொருட்கள் மட்டுமே அழிந்ததாக , அம்மாநில தீயணைப்பு மீட்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நள்ளிரவு மணி 12.50-க்கு ஏற்பட்ட தீயில் அந்த ஆலயம் எரிந்து போனதாக சமூக வலைத்தலங்களில் தகவல் பகிரப்பட்டிருந்தது. எனினும் , அவ்வாலயத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மட்டுமே தீயில் அழிந்ததாகவும், ஆலய கட்டட அமைப்பில் சேதமோ, உயிர் பாதிப்போ ஏற்படவில்லை என பினாங்கு மாநில தீயணைப்பு துறை குறிப்பிட்டது. மேலும், Kek Lok Si ஆலயத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை 11 நிமிடங்களிலே முழுமையாக அணைத்தனர்.