கோலாலம்பூர், ஜனவரி-9 – சுங்கை பினாங்கில் உள்ள பினாங்கு LRT கட்டுமானத் தளமருகே இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோர்ஜ்டவுன், லெபோ சுங்கை பினாங் தூஜோவில் வெடிப்பொருள் போன்றதொன்றை கண்டு, பொது மக்கள் காலை 9.50 மணிக்கு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு ஒழிப்பு நிபுணர்கள் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டு, காலை 11.50 மணியளவில் அப்பொருள் செயலிழக்க வைக்கப்பட்டதாக, தீமோர் லாவோட் போலீஸ் தலைவர் அப்துல் ரொசாக் முஹமட் (Abdul Rozak Muhammad) கூறினார்.
தொடக்கக் கட்ட விசாரணையில், அப்பொருள் காகிதம், கம்பிகள் மற்றும் சிமெண்டால் உருவாக்கப்பட்டது என்றும், அதில் வெடிக்கும் பொருட்கள் எதுவும் இல்லையென்றும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதி பாதுகாப்பானதே என உறுதிபடுத்தப்பட்டு, நண்பகல் மணி 12.15-க்கு மீண்டும் திறக்கப்பட்டது.
பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.