
மலாக்கா, ஆக 27 – மலாக்காவில், மேடான் செலேராவில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது திடிரென அவர்களை மோதித் தள்ளிய கார் ஒன்று.
உணவகம் அருகே கார் நிறுத்துமிடம் இருக்க, அங்கிருந்த பின்னாள் நகர்ந்த தொயோதா ரக கார் சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் உணவகத்தில் புகுந்தது.
அதிர்ஸ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை.
நேற்று சனிக்கிழமை மதியம் 2.43 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த காணொளி வைரலாகியுள்ளது.
விசாரித்ததில், அக்காரை ஓட்டியது 16 வயது இளைஞன் என்றும், காரை இயங்கச் செய்து வைக்கும்படி அவனது அம்மா கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் அவ்விளைஞனோ, காரை இயக்கி பின்புறம் செல்லும் கியரை போட்ட சமயத்தில், கார் நகரவே, பயத்தில் எண்ணெயை அமுக்கியுள்ளான்.
இச்சம்மவத்தில், குழந்தை உட்பட மொத்தம் 11 பேரை அக்கார் மோதித்தள்ளியது.
இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக மலாக்கா போலிஸ் தெரிவித்துள்ளது.