கோத்தா பாரு, ஏப்ரல்-5, கிளந்தானில் பிப்ரவரி மாதம் மட்டுமே பல்வேறு இனங்ளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
அதிக வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்க முடியாமல் விஷப்பாம்புகள் வெளியில் வந்து, புதர்களிலும், கற்களுக்கு அடியிலும் அல்லது வீடுகளைச் சுற்றிலும் உள்ள குளிர்ச்சியான இடங்களில் மறைந்துக் கொள்வதாக, மலேசியப் பொது தற்காப்புப் படை APM கூறியது.
ஜனவரியில் 991 பாம்புகளும், மார்ச்சில் 934 பாம்புகளும் பிடிபட்டதாக, APM-மின் கிளந்தான் கிளையின் இயக்குனர் Mohd Adzhar Mujab கூறினார்.
பிடிக்கப்பட்ட பாம்புகளில் மலைப்பாம்பும், நாகப்பாம்பும் அடங்கும் என்றார் அவர்.
பாம்புகள் அனைத்தும் மீண்டும் அவற்றின் வாழ்விடங்களிலேயே விடப்பட ஏதுவாக, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் தேசியப் பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.