ஜோகூர் பாரு , பிப் 11 – பெஜுவாங் கட்சி , பிப்ரவரி 24 -ஆம் தேதி ஜோகூர் மாநிலத் தேதலில் போட்டியிடவிருக்கும் தனது 42 வேட்பாளர்களின் விபரங்களை அறிவிக்குமென , அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முக்ரீஸ் மகாதீர் ( Datuk Seri Mukhriz Mahathir) தெரிவித்தார்.
இவ்வேளையில், துன் மகாதீர் ஜோகூர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அம்மாநில தேர்தலுக்கான பிரச்சாரங்களிலிலும், சுவரொட்டிகளிலும் அவரது புகைப்படங்கள் இடம்பெறுமென முக்ரீஸ் மகாதீர் குறிப்பிட்டார்.