கோலாலம்பூர், பிப் 8 – கோவிட் SOP சுகாதார நடைமுறைகளில் ஒன்றான , உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் முறை இம்மாதம் பிப்ரவரி 11-ஆம் தேதியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு ஏற்ப அந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசென் தெரிவித்தார்.
இதனிடையே, மார்ச் முதலாம் தேதிக்குள் நாட்டின் எல்லையை திறக்கும் திட்டம் தொடர்பில் முடிவெடுப்பதற்கு முன்பாக, சார்புடைய அமைச்சுகள் ,துறைகளுடன் தீர கலந்தாலோசிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.