கோலாலம்பூர், பிப் 12- வரும் பிப்-14 ஆம் தேதி தொடங்கி PICK திட்டத்தின் மையங்களுக்கு நேரடியாகவே walk-in முறையில் சென்று சினோவேக் வகை பூஸ்டர் தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
பூஸ்டர் தடுப்பூசி பெறத் தகுதியுடையோர் protecthealth.com.my என்ற அகப்பக்கதின் வாயிலாக நாடெங்கிலும் உள்ள சினோவேக் தடுப்பூசிகளை வழங்கும் மையங்களை அடையாளங்காணலாம் என ProtectHealth நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, முதல் மற்றும் இரண்டாம் முறையாக சினோவேக் தடுப்பூசியைப் பெற்றவர்கள் கூடுதல் தடுப்பூசியாகவும் சினோவேக்கைப் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.