
கோலாலம்பூர் , ஜன 21 – பிப்ரவரி 15-ஆம் தேதி முதல், பள்ளிச் சீருடை அணிந்த 12 வயது வரையிலான மாணவர்களுக்கும் , உடற் பேறு குறைந்தவர்களுக்கும் , KTMB நிறுவனம் இலவச ரயில் போக்குவரத்து சேவையை வழங்கும். Subang Skypark -கிலிருந்து KL Sentral வரையிலான KTM Komuter சேவையை ஒத்தி வைத்திருப்பதின் வாயிலாக அரசாங்கத்தால் ஆண்டுக்கு 1 கோடியே 50 லட்சம் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடிந்திருக்கிறது. அந்த தொகையைக் கொண்டு, குறிப்பிட்ட தரப்புக்கு இலவச ரயில் போக்குவரத்து சேவையை வழங்க முடிந்திருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Anthony Loke தெரிவித்தார். வடக்கு மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலும், Gemas – Tumpat நகர் பகுதிக்கு இடையிலும் மேற்கொள்ளப்படும் ரயில் சேவையை ஆரம்பப் பள்ளி மாணவர்களும், உடற் பேறு குறைந்தவர்களும் இலவசமாக பெற முடியும். அதோடு , கிளந்தானில் நாளொன்றுக்கு ஒரு ரிங்கிட் கட்டணத்தில் கிளந்தான் Dabong – கிலிருந்து Kuala Geris – சுக்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் 150 மாணவர்களும் அந்த இலவச ரயில் பயணத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என அந்தோணி லோக் கூறினார்.