Latestமலேசியா

பிரசன்னாவை கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசினர்; 5 நண்பர்கள் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, ஜூன் 11- பிரசன்னா அம்மாசி என்ற 40 வயது ஆடவரை கடத்தி அவரை கொலை செய்தபின்னர் ஆற்றில் வீசியதாக ஐவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 26 வயதுடைய பஷாருடின் ஹமிர்ஸ்லா, 34 வயதுடைய எஸ், ஜெயேந்திரன், 31 வயதுடைய எஸ். சைமன், 40 வயதுடைய டி. செல்வமணி, 36 வயதுடைய வி.திருகணேஷ் ஆகியோர் மீது மாஜிஸ்திரேட் நுர் மெலாத்தி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக அந்த ஐவரும் தலையை அசைத்தனர்.

அவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.
இன்னும் தலைமறைவாக இருந்துவரும் மேலும் இருவருடன் சேர்ந்து அந்த ஐவரும் 40 வயதுடைய பிரசன்னாவுக்கு மரணம் விளைவித்ததாக குறறச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த மே மாதம் 23 ஆம் தேதி காலை மணி 7.30க்கும் மாலை மணி 5.30க்குமிடையே ஈப்போ, ஜாலான் சே பூத்தேவில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்தததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.

மேலும் பிரசன்னாவை கடத்தியதாக ஜெயேந்திரன் , சைமன், பஷாருடின் மற்றும் செல்வமணி ஆகியோர் அன்றைய தினம் காலை 7.30 மணியளவில் கடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் நாதன் கிருஷ்ணன் மற்றும் சரன் சிங் ஆஜராகினர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் ஆகஸ்டு 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!