கோத்தா பாரு, செப்டம்பர் -17, குழந்தைப் பிரசவித்த தாய்மார்களைப் பத்தியத்தோடு பராமரிக்கும் மையத்தில், 30 நாள் குழந்தை உயிரிழந்தது தொடர்பில் கிளந்தானில் இளம் தாதி ஒருவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
செப்டம்பர் 9-ம் தேதி அமையத்தில் வைத்து அப்பச்சிளம் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது, அதற்குக் காயம் ஏற்பட்டு மரணமடையக் காரணமாக இருந்திருப்பதாக, 22 வயது Nur Ain Natasha Mohd Sabri கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும் குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணைக் கோரினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறையும், 50 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்க 2001 சிறார் சட்டம் வகை செய்கிறது.
பத்தாயிரம் ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தில் அப்பெண்ணை விடுவித்த நீதிமன்றம், அக்டோபர் 13-ல் வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றது.