
கோலாலம்பூர் , மார்ச் 8 – நாட்டில் கட்டப்பட்டு வரும் 18 PRIMA- மக்கள் வீடமைப்புத் திட்டங்கள், பிரச்சனைக்குரிய திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன .
அத்திட்டங்கள் சில பூர்த்தியடைய தாமதமடைந்திருப்பதோடு, சில கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக, ஊராட்சி மேம்பாட்டு துணையமைச்சர் Akmal Nasrullah Mohd Nasir தெரிவித்தார்.
அதையடுத்து, அமைச்சு அடையாளம் கண்டிருக்கும் அந்த திட்டங்கள் ஓராண்டுக்குள் பூர்த்தியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.