Latestமலேசியா

பல்வேறு வர்த்தக குற்றச் செயல்கள் தொடர்பாக கடந்த ஆண்டு 22,911 பேர் கைது

கோலாலம்பூர், ஜன 5 –  2.11 பில்லியன் ரிங்கிட் இழப்புகள் சம்பந்தப்பட்ட பல்வேறு வர்த்தக குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த ஆண்டு 22,911 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணை பிரிவின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசுப் தெரிவித்திருக்கிறார். இந்த காலக்கட்டத்தில 40,350 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக 1.679 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இழப்பு சம்பந்தப்பட்ட 36,030 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 380 மில்லியன் ரிங்கிட் தொடர்பான 1,215 நம்பிக்கை மோசடி குற்றச் செயல்களும் நடந்துள்ளதாக ரம்லி முகமட் கூறினார். 

அதோடு பணத்தை வட்டிக்கு விடுவோர் சட்டத்திற்கு கீழ் 5.4  மில்லியன் ரிங்கிட் இழப்பீடுகள் தொடர்பான 994 குற்றசெயல்கள் கடந்த ஆண்டு நடந்துள்ளன. 385 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள கள்ள நோட்டுக்கள் தொடர்பான 970 சம்பவங்கள், 35.63 மில்லியன் ரிங்கிட்டை உள்ளடக்கிய 867 கணினி குற்றங்களும் இவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார். வர்த்தக குற்றங்களில் சம்பந்தப்படுவோரின் மோசடிகளுக்கு பொதுமக்கள்  பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் வர்த்தக குற்றவியல் பிரிவு முன்னுரிமை வழங்கி வருவதாகவும் ரம்லி கூறினார். கடந்த ஆண்டு முழுவதிலும் பிரச்சாரங்கள், கண்காட்சிகள் மற்றும் சொற்பொழிவுகள் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!