
கோலாலம்பூர், பிப் 10 – 15 ஆவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்து இரண்டு மாதத்திற்குப் பின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செல்வாக்கு 68 விழுக்காடாக உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் சேர்ந்த 1,209 வாக்காளர்களிடம் டிசம்பர் 26ஆம்தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதிவரை மெர்தேக்கா மையம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து 54 விழுக்காட்டினர் திருப்தியடைந்துள்ளனர். 25 விழுக்காட்டினர் அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். அவர்களில் கால்வாசி பேர் தங்களது கருத்துக்களை கூற மறுத்துவிட்டனர். 48 விழுக்காட்டினர் நாடு சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தனர். எதிர்வரும் ஆண்டில் தேசிய பொருளாதாரம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருப்பதாக 43 விழுக்காட்டினர் கருத்தை வெளியிட்டுள்ளனர்.