Latestஉலகம்

உலகின் அதி வெப்பமான நகரமாக குவைத் சிட்டி பெயர் பதித்துள்ளது ; தட்ப வெப்ப சூழல் 52 பாகை செல்சியஸாக பதிவு

குவைத் சிட்டி, மார்ச் 20 – குவைத் நகரில் நம்பமுடியாத அளவுக்கு வெப்ப நிலை 52 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

தெருக்களில் அதீத வெப்ப அனல் வீசுவதால், கட்டங்களின் வெளிப்புறங்களில் கூட குளிரூட்டிகள் பயன்படுத்தப்படுவதை காண முடிகிறது.

அதனால், இம்முறை ஐரோப்பிய கண்டத்தில் உணரப்படும் வெப்ப அலையானது, குவைத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் சாதாரணமானதாக கருதப்படுகிறது.

அண்மைய சில ஆண்டுகளாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், குவைத்தில் அதன் கோடைக்கால வெப்ப நிலை 52 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளதால், உலகின் அதீத வெப்பமான பகுதியாகவும், மனிதர்கள் வசிக்க தகுதியற்ற இடமாகவும் கருதப்படுகிறது.

குவைத் நகரில், அதிக வெப்பம் காரணமாக, வானிலிருந்து பறவைகள் மடிந்து கீழே விழுவதாகவும், இறந்த கடல் குதிரைகள் தரை தட்டி கிடப்பதை காண முடிவதாகவும் கூறப்படுகிறது.

ஆங்காங்கே, புழுது புயலும் அதிகரித்துள்ளது.

அதனால், பகல் நேரங்களில் மக்கள் வெளி நடவடிக்கைகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இறுதிச் சடங்குகளை இரவில் மேற்கொள்ள அந்நாட்டி அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாண்டு மே தொடங்கி செப்டம்பர் வரை குவைத்தில் வெப்ப நிலை மோசமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!