பிரதமரின் துணைவியார் Dr வான் அசிசாவுக்கு செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை; குணமடைந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை
செர்டாங், அக்டோபர்-8 – பிரதமரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ Dr வான் அசிசா வான் இஸ்மாயில், சிலாங்கூர் செர்டாங் மருத்துவமனையில் நேற்று மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டார்.
சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல் நிலை சீராக இருக்கிறது.
இருந்தாலும் மருத்துவக் குழு அவரை அணுக்கமாகக் கண்காணித்து வர வேண்டியிருப்பதாக, செர்டாங் மருத்துவமனை அறிக்கையொன்றில் கூறியது.
Dr வான் அசிசா சீக்கிரமே குணமடைய பிராத்தனை செய்தவர்களுக்கும், முறையான சிகிச்சைக்கு அவருக்குத் தனிமைத் தேவைப்படுவதை புரிந்துகொண்டதற்காகவும் மருத்துவமனை நிர்வாகம் அனைவருக்கும் நன்றித் தெரிவித்துகொண்டது.
இவ்வேளையில், தனது மனைவி விரைந்து குணமடைய பிராத்திக்குமாறு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார்.
மருத்துவமனை வார்டில் வான் அசிசாவுடன் தாமிருக்கும் புகைப்படத்தையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.