கோலாலம்பூர், பிப் 3 – பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கான ஆதரவு நிபந்தனைக்கு உட்பட்டது என்பதை, பெர்சாத்து கட்சி மீண்டும் நினைவுறுத்தி இருக்கின்றது.
ஜோகூர் மாநில தேர்தல் தொடர்பான பரப்புரை கூட்டங்களில் அவ்விவகாரம் தொடர்பில் பேசப்படுமென அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் Wan Saiful Wan Jan தெரிவித்தார்.
டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பெர்சாத்து கட்சியே பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது. அம்னோ அல்ல என்பதை நினைவிற் கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார்.