
ஷா ஆலாம், மார்ச் 31 – பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் , பொருளாதார அமைச்சர் Rafizi Ramli இருவரின் முகவரிக்கு அனுப்பப்பட்ட பற்பசை கஞ்சா போதைப் பொருளை கொண்டிருக்கவில்லை.
அது பல்துலக்கும் வழக்கமான பற்பசையே என சிலாங்கூர் போலீஸ் தலைவர் Datuk Hussien Omar Khan தெரிவித்தார். ஆய்வுகூட சோதனைக்குப் பின்னர் அது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, அந்த பற்பசையை பொட்டலத்தில் அனுப்பிய தரப்பை போலீஸ் இன்னும் அடையாளம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.