உலு சிலாங்கூர், மே 9 -பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் சிலாங்கூர் Menteri Besarருக்கு ஆதரவு தெரிவித்த பெர்சத்து கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அவர்களின் உறுப்பினர் நிலை குறித்து அடுத்த வாரம் கடிதம் அனுப்பப்படும் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் Hamzah Zainuddin தெரிவித்தார்.
கோலா குபு பாரு மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்களிப்பு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட அனைத்து மக்களின் பிரதிநிதிகளுக்கும் ஒரே நேரத்தில் கடிதம் அனுப்பப்படும் என்று அவர் கூறினார். அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகத்தை ஆதரித்த பெர்சத்துவின் லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Suhaili Abdul Rahman உட்பட இதரை ஐவரின் உறுப்பினர் தகுதியை நீக்கும் முடிவில் Bersatu தெளிவாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவருமான Hamzah தெரிவித்தார்.
சில முக்கிய விவகாரங்கள் காரணமாக உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான கடிதம் முதலில் Suhailiலிக்கு வழங்கப்படும் . பெர்சத்து உச்ச மன்றம் உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இது தொடர்பாக ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Hamzah சுட்டிக்காட்டினார்.
பக்காத்தான் ஹராப்பான் மேடையில் கோலா குபு பஹாருவில் பேசிய மேலும் இரண்டு பெர்சாத்து பிரதிநிதிகள் தஞ்சோங் கராங்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Dr Zulkafperi Hanapi , Selat klang சட்டமன்ற உறுப்பினர் Datuk Abdul Rashid Asari ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என Hamzah கூறினார். அவர்கள் இருவரும் இயல்பாகவே பெர்சத்து உறுப்பினர்கள் நிலையை இழந்துவிட்டனர். இதனை பெர்சத்து உச்சமன்றம் உறுதி செய்ய வேண்டும் என Hamzah தெரிவித்தார்.