Latestமலேசியா

பிரதமருக்கு எதிராக சதித்திட்டமா ? பெர்சத்து மறுப்பு

ஈப்போ, ஜூன் 13 – பிரதமர் Datuk Sri Ismail Sabri Yaakob கிற்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக வெளியான தகவலை பெர்சத்து கட்சி மறுத்துள்ளது. பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டத்தில் பிரதமரை மாற்றுவது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லையென அக்கட்சியின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ Ahmad Faizal Azumu தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்கு தயாராகுவதற்கான பெர்சத்துவின் ஏற்பாடு மற்றும் மலேசியாவில் விலைவாசி உயர்வு குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக அவர் விவரித்தார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு உதவி புரியும் வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என Ahmad Faizal தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!