Latestமலேசியா

பிரதமரை சிறுமைப்படுத்தி ஆடவர் ஆற்றிய உரை குறித்து போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், மார்ச் 12- ஜாலான் டூத்தா நீதிமன்றத்திற்கு  வெளியே வாகனத்தில் நின்றுகொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சிறுமைப்படுத்தும் வகையில் ஆடவர் ஒருவர் ஆற்றிய உரை குறித்து  போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த ஆடவரின் உரையைக் கொண்ட காணொளி    Tik Tok க்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக    Sentul  மாவட்ட  போலீஸ் தலைவர்  துணை கமிஷனர்  Beh Eng Lai    தெரிவித்தார்.

அந்த ஆடவர் ஒலிபெருக்கியியின் மூலம் நடப்பு அராங்கத்தின்  நிர்வாகத்தை  கேள்வி எழுப்பும் வகையில்   மிகவும் வேகமாக உரையாற்றுவதை அந்த  காணொளியில் காண முடிகிறது.

வெள்ளிக்கிழமையன்று  டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிரான   நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டபோது  அந்த ஆடவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக  Beh Eng Lai   தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!