கோலாலம்பூர், ஆகஸ்ட்-12 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உடல் நலம் மிகச் சிறந்த நிலையில் இருப்பதை, சிலாங்கூர் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வையில் டத்தோ ஸ்ரீ அன்வார் ஞாயிறன்று தமது வருடாந்திர மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார்.
சிலாங்கூர், செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் அப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உடல்நலம் சிறப்பாக இருப்பதால், அரசாங்கத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றிட அவர் உற்சாகத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
டத்தோ ஸ்ரீ அன்வார் நேற்று முன்தினம் தமது 77-வது பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.