
கோலாலம்பூர், பிப் 5 – தைப்பூச திருநாளை கொண்டாடும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இந்து பெருமக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். பல்வேறு கலாச்சாரங்கள் மூலம் மக்கள் தங்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் இந்நாட்டிலுள்ள பல்வேறு இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நல்லதொரு தளமாக இருந்துவருவதாக அன்வார் கூறினார். தைப்பூச திருநாள் கொண்டாட்டத்தின் மூலம் நம்மிடையே இருந்துவரும் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திக்கொள்வோம் என தமது முகநூலில் பதிவேற்றம் செய்த தைப்பூச வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.