![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/d65831_f6994c05df3f4e8a8cc24237e427f794mv2.png)
கோலாலம்பூர், டிச 23 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கான ஆதரவு 4 விழுக்காடு அதிகரித்து அவரது நிர்வாகத்தின் இரண்டாவது ஆண்டில் 54 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று மெர்தேக்கா ( Merdeka ) ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் அன்வாரின் செயல்திறனில் வாக்காளர்கள் பொதுவாக திருப்தி அடைந்துள்ளதாகவும், ஆனால் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றி கேட்கப்பட்டபோது கலவையான மதிப்பீட்டை அவர்கள் அளித்ததாகவும் மெர்டேகா மையம் கூறியது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் அன்வாரின் முயற்சிகளில் வாக்காளர்கள் பெரும்பாலும் திருப்தி அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மலேசியாவின் கௌரவம் மற்றும் அரசாங்க சேவையை மேம்படுத்துதல் இறுதியாக பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றிலும் மக்கள் திருப்தி அடைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. .
அதே நேரத்தில், கூட்டரசு அரசாங்கத்திற்கான ஆதரவு 2023 ஆம் ஆண்டு நவம்பரில் 46 விழுக்காடு இருந்ததை ஒப்பிடுகையில் தற்போது இது 51 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக Merdeka மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல், வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளை தீர்வு காணுதல், நேர்மையை மேம்படுத்துதல், ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் இன உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட எட்டு அம்சங்களில் அரசாங்கத்தின் செயல்திறனை மதிப்பிடும்வகையில் அதன் ஆதரவு காட்டியுள்ளது.
நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 52 விழுக்காடு மலாய்க்காரர்கள், 29 விழுக்காடு சீனர்கள், 7 விழுக்காடு இந்தியர்கள் மற்றும் 6 விழுக்காடு முஸ்லீம் பூமிபுத்ரா மற்றும் முஸ்லிம் அல்லாத பூமிபுத்ராவை உள்ளடக்கிய 1,207 பதிவுபெற்ற வாக்காளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அதே வேளையில் தற்போதைய கூட்டரசு அரசாங்கத்திற்கு எதிராக 47 விழுக்காட்டினர் அதிருப்தியடைந்துள்ளதையும் Merdeka மையம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.