
கோலாலம்பூர், செப் 14 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இன்று நாடாளுமன்றத்தில் பிலிப்பின்ஸ் மக்கள் பிரதிநிதி குளோரியா மகாபகால் அரோயோ மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அரோயோவும் அவரது பேராளர் குழுவினரும் இன்று காலை மணி 11.50 அளவில் நாடாளுமன்றம் வந்தனர். அவர்களைப் பிரதமர்துறையின் சட்ட மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் மற்றும் துணையமைச்சர் ராம்கர்பால் சிங் வரவேற்றனர. அதன்பிறகு அன்வாரை அரோயோ சந்தித்தார். மக்கள் தொகை மற்றும் மேம்பாடு மீதான அனைத்துகலக மாநாட்டின் தலைவருமான அரோயோ அன்வாருடன் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார். கட்டாய மரண தண்டனை அகற்றப்பட்டது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் பேச்சு நடத்தினர்.