
கோலாலம்பூர், ஜன 18 – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார். இருவழி நட்புறவு, பொதுவான நலன்கள் மற்றும் வட்டார விவகாரம் குறித்து அவ்விரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தங்களது பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டதாக அன்வார் தமது முகநூலில் பதிவிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லாவையும் நேற்று விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்தார்.