Latestமலேசியா

பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கான ஆதரவை பெரிக்காத்தான் மீட்டுக்கொள்ளலாம்

கோலாலம்பூர், ஆக 5 – பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கான் ஆதரவை பெர்சத்து தலைமையிலான பெரிக்காத்தான் நேசனல் மீட்டுக்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிக்காத்தான நேசனல் பிரதமருக்கான ஆதரவை மீட்டுக்கொண்டால் கூட்டரசு அரசாங்கம் கவிழும் சூழ்நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது. அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியுடன் பெரிக்காத்தான் அரசாங்கத்தை அமைத்தது. பிரதமர் இஸ்மாயில் சப்ரியுடன் திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்தை நேற்றிரவு பிரதமர் அலுவலகம் திடீரென ரத்துச் செய்ததால் பெரிக்காத்தான் கூட்டணி அதிருப்தி அடைந்துள்ளதாக ஆங்கில தினசரி ஒன்று செய்தி வெளியிட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் தனது தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுடன் செய்துகொண்ட உடன்பாட்டிற்கு ஏற்ப துணைப்பிரதமரை நியமிப்பதற்கு இஸ்மாயில் சப்ரியை நெருக்குதல் அளிக்கும் வகையில் அந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக பெர்சத்துவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாகவும் தகவல் வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!