Latestஉலகம்மலேசியா

பிரதமர் இஸ்மாயில் சப்ரி ஜப்பானிய பிரதமர் தொலைபேசியில் பேச்சு நடத்தினர்

கோலாலம்பூர், ஏப் 23- மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob மற்றும் ஜப்பானிய பிரதமர் Kishida Fumio தொலைபேசியில் சுமார் 20 நிமிடம் பேச்சு நடத்தினர். பரஸ்பர நலன்கள் தொடர்பான வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து அவ்விரு தலைவர்களும் விவாதித்தனர். உக்ரைய்னுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து அவர்கள் தங்களது கவலையையும் வெளிப்படுத்தினர். அனைத்துலக சட்டம் மீறப்பட்டுள்ளதோடு ஒருதலைப்பட்டசமான எந்தவொரு படை பலத்தையும் ஜப்பான் எதிர்ப்பதாக
Kishida தெரிவித்தார். இதனிடையே உக்ரைய்னில் ஏற்பட்டுள்ள மோதலை மலேசியா கடுமையாக கருதுவதாக இஸ்மாயில் சப்ரி ஜப்பானிய பிரதமரிடம் தெரிவித்தார். நிலைமை மேலும் மோசமடைவதை தடுப்பதற்கு அமைதியான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!