
தொக்யோ , மே 27 – மலேசியா – ஜப்பான் இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் விதமாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும், ஜப்பானிய பிரதமர் Fumio Kishida –வும் சந்திப்பு நடத்தினர்.
ஆசிய எதிர்காலம் தொடர்பில் நடைபெறும் 27 –வது அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இஸ்மாயில் சப்ரி ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கின்றார்.
அந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஜப்பானின் முன்னணி வர்த்தக நிறுவன தலைவர்களை சந்தித்தப் பிரதமர், அந்நாட்டு பிரதமருடன் சந்திப்பு நடத்தினார்.
இவ்வேளையில், மலேசியா – ஜப்பான் இடையிலான உறவை வலுப்படுத்த முக்கிய பங்காற்றிய ‘கிழக்கே நோக்கும் கொள்கை’ அறிமுகப்படுத்தப்பட்டு இவ்வாண்டுடன் 40-ஆண்டுகள் நிறைவை எட்டுகின்றது.