
கோலாலம்பூர், ஏப்ரல் 27 – இவ்வாண்டு தொழிலாளர் தின கொண்டாட்டம் 2023, புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (international convension centre) மே 1 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு மேல் நடைபெறுகிறது என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார். இவ்விழாவில் பிரதமர் கலந்துகொள்வது அனைத்து தொழிலாளர்களுக்கும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.
தொழிலாளர் தின கொண்டாட்ட விழாவில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொழிலாளர்கள் நலன்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்புகளை செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சிவக்குமார் தெரிவித்தார். இன்று RTM Nasionl fm வானொலிக்கு வழங்கிய தொழிலாளர் தின சிறப்பு பேட்டியில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.