Latestமலேசியா

பிரதமர் பதவிக்கு வரத் துடிப்பவர்கள் மேலும் மூன்று மாதம் காத்திருக்க வேண்டும்

கோலாலம்பூர். ஜூன் 11- பிரதமர் பதவிக்கு வருவதற்கு துடிப்பவர்கள் இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். நாடாளுமன்றம் கூடுவதற்கு இன்னும் மூன்று மாதம் இருப்பதால் அதுவரை பொறுத்திருங்கள் என உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் கேட்டுக்கொண்டார்.

தேசிய தடுப்பூசி போடும் இயக்கம் தற்போது நடைபெற்று வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும் என அவர் கூறினார். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் தனது நோக்கத்தில் அரசாங்கம் வெற்றியடைந்துவிடும் என்று ஹம்சா ஜைனுடின் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!