Latestமலேசியா

பிரதமர் பிரச்சனைகளை மறைப்பவர் அல்ல – ரமணன்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – நமது நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது என்று தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் பிரச்சனைகளை மூடி மறைக்காமல் வெளிப்படைத் தன்மையாக நடந்து கொள்பவர்.
தனது துறையாக இருந்தாலும் சரி; தவறுகள் நடந்தால் உடனே அதற்கான தீர்வைக் காண்பவர்தான் பிரதமர் என்றார் ரமணன்.

இதனிடையே 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தால், துணையமைச்சராக நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்வேன் என்றார் ரமணன்.

இன்றைய நிகழ்ச்சியில் SME வங்கியும் தாபோங் ஹாஜியும் கருத்திணக்க உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

இதன் மூலம் சிறு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களுடன் இணைந்து தொழிலை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இது சிறிய நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தில் விரிவாக்கம் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது என்று டத்தோ ரமணன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!